தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அதன்படி ரத்த அணுக்கள் உற்பத்தியை தூண்டுவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தை குறைக்கும், செரிமானத்திற்கு உதவும்.