புதினா இலைகளை நாம் பெரும்பாலும் சமைக்கும் உணவுகளில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் தமிழகத்தில் பிரியாணி பரிமாறும் போது புதினா துவையலும் இடம்பெறும். தோசையுடன் தொட்டு சாப்பிட புதினா சட்னி, மதிய வேளைக்கு புதினா சாதனம் என பல வகைகளில் புதினா நமது உணவுமுறையில் இடம்பெற்றிருந்து.
புதினா இலைகளின் மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவின. ஒரு கட்டு புதினாவின் விலை குறைவாக இருந்தாலும் பிரியாணி தயாரிப்பின் போது மட்டுமே பெரும்பாலானோர் அதை பயன்படுத்துகின்றனர்.
செரிமானத்திற்கு உதவி
புதினா இலைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் உள்ளது. சுருக்கமாக இதை கிருமி நாசினி எனக் கூறலாம். செரிமானத்திற்கு தேவையான ஜூஸ்களை உருவாக்கி உங்கள் வயிற்றை சிறப்பாக செயல்பட உதவும்.
மேம்படும் சுவாச ஆரோக்கியம்
புதினா இலைகளில் மெந்தோல் உள்ளது. இது நெஞ்சு எரிச்சலைப் போக்க உதவுகிறது. மேலும் சளி பிடித்திருக்கும் போது புதினா இலைகளை சாப்பிட்டால் மூக்கு அடைப்பு, தொண்டை கரகரப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
மூளையின் செயல்திறன் அதிகரிப்பு
புதினா இலைகள் மூளைக்கான ஸ்பெஷல் டானிக் ஆகும். புதினா இலைகளை சாப்பிடுவது அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் மன விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும்.
குறையும் மன அழுத்தம்
புதினா இலையின் வாசனை மன அழுத்தத்தை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.
சருமத்திற்கு நல்லது
புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது முகப்பருவை குணப்படுத்தவும், பிசுபிசுப்பாக இருக்கும் எண்ணெய் பசை சமருத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஒவ்வாமை எதிர்ப்பு
புதினா இலைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் ஒவ்வொமை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதாகவும் இது பல்வேறு வகையான ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் எனவும் கண்டறியப்பட்டது.
எடை இழப்புக்கு உதவி
புதினா டீ குடிப்பது உங்கள் உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.
குடல் நோய்களுக்கு தீர்வு
புதினா எண்ணெயில் மெந்தோல் உள்ளது. இது செரிமான அமைப்பின் பொதுவான கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.