சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும். யோகா என்பது நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு கலை ஆகும். நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை அமைதியாக வைத்திருக்க செய்ய கூடிய பயிற்சியாகும். அதுமட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்கவும் யோகா உதவுகிறது. எனவே ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் அவர் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மன அழுத்தம்
கடுமையான வேலை செய்பவர்கள், கணினி சம்பந்தமான வேலை செய்பவர்கள் தினமும் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலையில் உள்ள மனஅழுத்ததால் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வடிகாலாக யோகாசன கலை இருக்கிறது.
சீரான சுவாசம்
நமது உடல் நலம் சிறப்பாக இருக்க நமது சுவாசம் சீராக இருப்பதும், தூய்மையான காற்றை சுவாசிப்பதும் அவசியம் ஆகும். தினமும் யோகா சனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
மன அமைதி
தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியடைகிறது.அதிகப்படியான வேலைபளு மற்றும் இன்ன பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை, சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது.
இரத்த ஓட்டம்
யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நம்முடைய இரத்த ஓட்டம் சீரடைகிறது. இப்படி ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவை சிறிது சிறிதாக நீங்குகிறது.
உடல் நெகிழ்வாக மாறும்
யோகா செய்வதால் உடல் நெகிழ்வாகும். உண்மையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் யோகா செய்யும் போது, அது உங்கள் முழு உடலையும் வளைக்கும். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இதுவே காரணம்.