23 உயிர்களைப் பறித்த மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் நடந்த ஒரு ஆண்டில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதே போன்ற சம்பவத்தில் 7 பேர் பலியானதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் தொடர்பில் இருப்பது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மஸ்தானையும் விற்பனையை தடுக்காத அமைச்சர் முத்துசாமியையும் பதவி நீக்கும்படி அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.