திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ள கட்சி தலைமை, தமிழகத்தில் பூரணமது விலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.