மின்சாரத் துறையில் நிர்வாகக் குறைவும் ஊழலும் தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி மாதம் தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட நான்கு புள்ளி எட்டு சதவீத மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.