மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்காக, உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில் நேற்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்து அளித்துள்ளார். சிக்கன், மட்டன் பிரியாணி, மீன் வறுவல் என தடபுடலாக விருந்து அளித்துள்ளார். இதில், 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுக்கும், முக்கிய அமைச்சர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அழைப்பு இல்லை. இதே வேகத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும் என்று அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.