ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது காலத்தில், திமுகவினரை ஜென்ம விரோதியாக அதிமுகவினர் கருதியதாக குறிப்பிட்ட அவர், தற்போது அதற்கு மாறாக திமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் வாக்களித்துள்ளனர் என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை, 65,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வீழ்த்தினார்.