விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி சேலைகள் பாமகவினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், அவற்றைப் பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தோல்வி பயத்தில் திமுக வாக்காளர்களை விலை கொடுத்து வாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்