திராவிட மற்றும் தமிழர் உணர்வோடு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசி இருப்பதாக அமைச்சர் பொன்முடி பாராட்டியுள்ளார். நீட் தேர்வு ரத்து, மாநிலங்களுக்கு உரிமை மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் பேசியவை அனைத்தும் திமுகவின் கொள்கைகள் எனவும் அவர் திராவிட உணர்வோடு அதை பிரதிபலித்திருக்கிறார் என்றும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.