மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. அக்கூட்டணியின் சார்பாக சபாநாயகர் தேர்தலுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இதுகுறித்து அறிவிப்பதற்கு முன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கூறியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ், ஆனாலும் சுரேஷுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளது.