தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்தடுத்து அரசியல் ரீதியான காய்களை நகர்த்தி வரும் நிலையில் முதல் அரசியல் மாநில மாநாட்டை திருச்சியில் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் நடத்தவும் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்களை சந்திக்கும் வகையில் நூறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செல்லவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.