முதல் அரசியல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர், விஜயகாந்த், கமல் போன்ற முக்கிய தலைவர்கள் மதுரையில் முதல் மாநாட்டை நடத்திய நிலையில் அதிலிருந்து தன்னை தனித்து காட்ட நினைத்து விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மையப்பகுதி என்பதால் அனைவரும் எளிதில் வந்து செல்ல முடியும் என்பது அவரின் கணக்கு.