திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடி வரை வாரம் இரண்டு முறை இன்று முதல் விரைவு ரயில் இயக்கப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10 மணிக்கு வரும். அதே போல தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:30 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.