திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற நடிகை பிரியா ஆனந்த், கோவிலுக்குள் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு வெளியே வந்த பிரியா ஆனந்த், கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றார். அப்போது நடிகையை பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர். மேலும் கோவில் வளாகத்தில் ஊட்டி மலைப்பகுதியை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய மலைவாழ் நடனமான படுகு நடனமாடினர். இதை நடிகை பிரியா ஆனந்த் பக்தர்களுடன் பார்த்து ரசித்தார்.