திருமலை திருப்பதியில் பக்தர்களுக்காக மலிவு விலை உணவகங்கள் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தான செயல் அலுவலரான ஷியாமளா ராவ், தாஜ் குழுமம் மற்றும் இந்திய சமையல் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு நியாயமான விலையில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் சுவையான உணவு வழங்குவதே தேவஸ்தானத்தின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.