திருப்பதியில் அக்டோபர் மாதம் சாமி தரிசனம் மேற்கொள்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. அறை ஒதுக்கீட்டுக்கான புக்கிங் மாலை 3 மணிக்கு வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவுகளை என்ற இணையதளம் மூலமாக செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு இருபது ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.