திருப்பத்தூரில் சிறுத்தைக்கு அஞ்சி காரில் சிக்கித் தவித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருப்பத்தூர் பள்ளி வளாகத்தில் நுழைந்த சிறுத்தை பின்னர் அருகே இருந்த கார் ஷெட்டிற்குள் நுழைந்தது. ஷெட்டில் இருந்த 2 கார்களில் சிக்கித் தவித்த 5 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 6 மணி நேரத்திற்கு மேலாக 5 பேர் காருக்குள் சிக்கி தவித்து வந்தனர்.
கார் ஷெட்டின் பின்பகுதியில் ஏணி செலுத்தி ஒவ்வொருவராக வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். சிறுத்தைக்கு மயக்கம் ஊசி செலுத்தி பிடிப்பதற்கு மருத்துவ குழுவினர் ஆயத்தமாக உள்ளனர் .