திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதால், பாவ வினைகள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும். ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரின் அருள் கிடைத்து, மனதில் அமைதி, நிம்மதி ஏற்படும். திருவண்ணாமலை மலை சித்தர்களின் வாழ்விடமாக கருதப்படுவதால், அவர்களின் அருளும் கிடைக்க வாய்ப்புண்டு. கிரிவலம் செய்வதால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிரிவலம் செய்வதால், உடல் நலம் மேம்படும். நோய்கள் தீர்ந்து, ஆரோக்கியம் பெருகும். கிரிவலம் செய்வதால் மன அழுத்தம், கவலைகள் குறைந்து, மனம் புத்துணர்ச்சி பெறும். கிரிவலம் செய்வதால் நடைப்பயிற்சி அதிகரிப்பதால், உடல் எடை குறைய வாய்ப்புண்டு.
கிரிவலம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம் ஏற்படும். கிரிவலம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கிரிவலம் செய்வதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் கிரிவலம் செல்வது சிறந்தது.
தமிழ் மாதங்கள் தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் வரும். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரைக்கு இருக்கும் சிறப்புகள் அதிகம். சித்திரை திங்கள் விழா என்பது சூரியனின் நகர்வு நிலையைக் கொண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
இது வசந்த காலத்தின் துவக்கம் என்பதால் செடி, கொடிகள் பூத்துக் குலுங்குகின்ற காலமாக அமைகிறது. மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை விட சித்திரா பௌர்ணமி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் நம்முடைய தலைவிதியை பாவக்கணக்கு மூலம் தீர்மானிக்கும் சித்திரகுப்தரை வணங்குதலும் , ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம், ஆலயத்தின் சக்தி சித்திரை மாதப் பெளர்ணமி நாளில் இன்னும் அதிகமாக வெளிப்படும் என்பது ஐதீகம்.
சக்தி அதிகம் கொண்ட பௌர்ணமி நாளில் இறைவன் குடியிருக்கும் மலையை பக்தியுடன் சுற்றி வரும் கிரிவலம் நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது உலகப் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்தான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் சிறப்பு கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கோயிலையொட்டி அமைந்துள்ள மலையைச் சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.