திரைத்துறையில் தாக்குப் பிடிப்பது மிக மிக கடினம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, தன் மகன் சினிமாவில் நடிக்க வந்தது திட்டமிட்டு நடக்கவில்லை எனவும், திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை தனது மகனுக்கு சொல்லி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அனல் அரசு மூலம் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.