நடிகர் ஜான்விஜய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து சில பெண்கள் தன்னிடம் பகிர்ந்து இருப்பதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். இது குறித்து பெண்கள் சிலர் அனுப்பிய செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். அதில் பெண் செய்தியாளர் ஒருவரும் தன்னிடம் நடிகர் ஜான்விஜய் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த செய்தி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.