திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் பணியில் அர்ப்பணிப்போடு காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.