பிரமாண்டமான காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்’ 2 ஆவது சீசன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது ஒரு அமெரிக்க மாயாஜால தொடராகும். ஜேடி பெய்ன் மற்றும் பேட்ரிக் மெக்கே ஆகியோரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வரும் 29ஆம் தேதி தொடர் வெளியாக உள்ளது.