தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இதில் அழகுராஜா என்பவர் லாரி விபத்து ஏற்படுத்தியதால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். அப்போது பெட்ரோல் கேனை வீட்டினுள் வீசியுள்ளார் இதனால் வீட்டில் இருந்த அனைவர் மீதும் தீப்பிடித்தது. அதில் அழகுராஜா உட்பட 3 பேர் உயிரிழந்தனர் மற்ற நபர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.