உ.பி., நொய்டா, செக்டார் 8, ஜே.ஜே.காலனியில் புதன்கிழமை காலை ஒரு சோகமான சம்பவம் நடந்தது. வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். இவர்களது தந்தை தௌலத் ராம் இ-ரிக்ஷா ஓட்டுகிறார். அதன் பேட்டரியை வீட்டில் வைத்திருந்தார். அது வெடித்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டது. அப்போது தௌலத் மயங்கி விழுந்தார். வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். தௌலத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.