ஆந்திராவின் துணை முதலமைச்சர் ஆக பதவியேற்ற பவன் கல்யாண் கோப்புகளில் கையெழுத்திட்டார். துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளை வென்றது பவன் கல்யாணின் ஜனசேனா. தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்த பவன் கல்யானுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.