தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஜீரணிக்க முடியாது; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்தது எப்படி நியாயம்?; அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.