தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் துரைமுருகன் ஏன் துணை முதல்வராக கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா என்ற கேள்விக்கு, உதயநிதிக்கு இருக்கும் ஒரே தகுதி ஸ்டாலினின் மகன் என்பதுதான். அவருக்கு வேறு எந்த ஒரு தகுதியும் இல்லை என தெரிவித்தார். மேலும் திமுகவில் இருக்கும் சீனியர் ஒருவரை ஏன் துணை முதல்வராக நியமிக்க கூடாது என்றும் வினவிஉள்ளார்.