தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழிகள் வளர்க்க அரசு 50% மானியம் வழங்குகிறது.இதன் மூலம் 250 நாட்டுக் கோழி குஞ்சுகள் மற்றும் கொட்டகை அமைக்க ரூ.1,56,875 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம்,கால்நடை மருத்துவரை அனுகி ஜூலை.10 க்குள் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.