தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழி
நெறிகாட்டும் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அங்கு நேரடியாக சென்று தங்களது சுய விவரங்களுடன் பங்கேற்கலாம் என தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார். முகாமில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.