தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஜூலை 15) காலை உணவு திட்டத்தில் பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 548 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கியது. இதன் மூலம் 20,848 மாணவ மாணவிகள் தினம் தோறும் பயன்பெறுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.