தமிழ்நாட்டை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், ஒரு தொழிலதிபர் மக்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்ததற்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் சந்தேகித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய 21 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்