தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் துப்பாக்கி சூட்டை ஏற்க முடியாது எனவும் இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்கள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது சொத்துக்களை கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.