தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அடையாள அட்டைகள் அனைத்தும் எரிந்துவிட்டதால் இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.