மதுரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் ராமநாதபுரம் ரயில் 5,6,8,9,11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் குருவாயூர் ரயில் 4,5,8,10 ஆகிய தேதிகளில் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை ரயில் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாற்று பாதையில் திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.