தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதையடுத்து சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்து அவர்கள் உடனடியாக கற்களை வீசி நாய்களை விரட்டி அடித்தனர். இதனைத்தொடர்ந்து கடிபட்ட சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.