சாராய விற்பனையை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், கள்ளச்சாராயம் விற்பவர்களை தூக்கில் போட சட்டம் இயற்றலாம், அதற்கும் ஒரு நியாயம் வேண்டும் என்று கூறினார். மேலும், மதுவிலக்கு குறித்து சரியான நேரத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.