அர்ஜென்டினாவிற்கு அருகிலுள்ள தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஆர்கோஸ் ஜார்ஜியா என்று அழைக்கப்படும் 176 அடி கப்பல் மூழ்கியது. ஃபாக்லாந்து தீவுகளில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில், 6 பேர் பலியாகினர், மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர். விபத்தின் போது படகில் 27 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. விமானம் மற்றும் கப்பல்கள் தேடுதல், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.