தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஆக சீனிவாச ராவ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜுவாகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர் விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சீனிவாச ராவ் யாதவை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு. இதுவரை கட்சித் தலைவராக இருந்து வந்த ஆந்திர அமைச்சர் அட்சய நாயுடு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அட்சய நாயுடு 5 முக்கியத் துறைகளின் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.