தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக டாக்டர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசநோயை வேரறுக்க உதவும் ஆராய்ச்சி குறித்த ஆலோசனையை வழங்குவதிலும், சர்வதேச மருத்துவ நிபுணர் குழுக்களை அமைப்பதிலும் அவர் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.