தேர்தல் தோல்வி தொடர்பாக, விழுப்புரம் நிர்வாகிகளுடன், சென்னையில் இன்று இபிஎஸ் ஆலோசனை நடத்திவருகிறார். மக்களவைத்தேர்தல் தோல்வி மற்றும் அதிமுகவை பலப்படுத்தும் யுக்திகள் குறித்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று 8 ஆவது நாளாக காலையில் விழுப்புரம் நிர்வாகிகளிடமும், பிற்பகலில் கன்னியாகுமரி, மாலையில் தருமபுரி மாவட்டங்களின் நிர்வாகிகளிடமும் விவரங்களை கேட்டறிகிறார்