மெட்ரோ, இயற்கை பேரிடர், தொழில் மற்றும் நகர்புற வளர்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதி இல்லை. சுருக்கமாக சொன்னால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு இல்லை என்று உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழ் -தமிழ்நாடு என்று பாசாங்கு செய்தவர்களின் முகமூடி தேர்தல் கிழிந்ததும் கிழிந்து தொங்குகிறது என்று கூறிய அவர், மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.