பொதுவாக தேள் கொட்டினால் அதிர்ச்சி அடைவோம் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தேள் விஷம் மிகவும் விலை உயர்ந்தது. தேள் விஷம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. டெத் ஸ்டாக்கர் ஸ்கார்பியன் என்பது உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் அதிக விஷமுள்ள தேள் இனமாகும். இந்த தேள்களின் விஷம் ஒரு மில்லி லிட்டருக்கு 8 லட்சத்துக்கும் அதிகமாகும். டெத் ஸ்டாக் ஸ்கார்பியன் பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தேள் கொட்டினால் உடனே உயிர் போகும் அபாயமும் உள்ளது.