முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்கள், அடுத்தடுத்து பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்றொரு பேரனான சூரஜ், தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக, ம.ஜ.த. ஊழியர் அளித்த புகாரில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.