டெல்லியில் உள்ள ஜிடிபி நகரில் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் கோரிக்கைகள் என்ன? தொழிலாளர்களின் தேவைகள் என்னென்ன என்பது குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்த கடின உழைப்பாளிகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.