AI தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மௌசம் நூர், இந்த தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். அதில், AI-ஐ பயன்படுத்தி பாகுபாடு காட்டக் கூடாது, தங்களை பாதிக்கும் முடிவுகளை நிராகரிக்க பணியாளர்களுக்கு உரிமை வழங்குவது போன்றவை வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவை விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.