மத்திய அரசு உத்யோகினி (Udyogini) என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டியில்லா கடனும் வழங்கப்படுகிறது.