முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜன்ட் கோப்பையை வென்றது. இந்நிலையில், அவரிடம் உலகின் சிறந்த 11 வீரர்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சச்சின், ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், சேன் வார்ன், மெக்ராத், கோலி, ரோஹித், ஏபி டி வில்லியர்ஸ், பிளிண்டாப், முரளிதரன், அக்ரம் என பதிலளித்தார். ஆனால் 2 உலக கோப்பை வென்ற தோனி பெயரை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.