இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-4 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி இழந்துள்ளது. தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, “பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங் & பீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இதுவே இந்த தொடரை இழக்க காரணம். இனிவரும் காலங்களில், இந்த தவறுகளை திருத்திக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.