விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தோல்வி பயத்தால் அதிமுக புறக்கணித்ததாக கூறப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதால் அதிமுக புறக்கணித்திருப்பதாகவும், சூழல் மற்றும் காலத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது ராஜதந்திரம் என்றும்,அதன்படி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை இபிஎஸ் எடுத்துள்ளார் என்றும் உதயகுமார் கூறினார்.